இயற்கை அனர்த்தங்களின் போது அனைவரும் இணைந்து பணியாற்றுவது அவசியம் – இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ வலியுறுது!

Wednesday, June 9th, 2021

இயற்கை அனர்த்தங்களின் போது ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் சகலரும் இணைந்து பணியாற்றுவது முக்கியமானது என்று நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு , அனர்த்த முகாமைத்துவ மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் சமல் ராஜபக்ஷ – அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கும் விரைவாக நஷ்டஈடு வழங்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டியதுடன் அனர்த்தத்தின் போது முப்படையினர், பொலிஸார், பிரதேச செயலகங்கள் அர்ப்பணியுடன் செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: