இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதகதியில் காப்புறுதி கொடுப்பனவு!

Friday, June 2nd, 2017

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் காப்புறுதிக் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக இலங்கையில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் காப்புறுதி உரித்துகளைக் கொண்டிருந்தனர்.

அத்துடன், பலர் விவசாய மற்றும் சுயதொழில் காப்புறுதிகளையும் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் காப்புறுதி கொடுப்பனவுகளை துரித கதியில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இந்த வேண்டுகோளை அனர்த்த முகாமைத்துவக் குழுவின் உறுப்பிரான அமைச்சர் கபீர் ஹாசிம் அனைத்துக் காப்புறுதி நிறுவனங்களிடமும் முன்வைத்துள்ளார்.

மேலும், இது தொடர்பான வேண்டுகோள் தனியார் காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திடமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts: