இயக்கச்சியில் வெடிவிபத்து – மூன்று பிள்ளைகளின் தாய் படுகாயம்!

Friday, July 3rd, 2020

இயக்கச்சி நித்தியவெட்டை பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இளம் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

இந்த சம்பவம் இன்றுகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது – நித்தியவெட்டை பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணியில் குறித்த பெண் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டள்ளது. இதனால் படு காயமடைந்த குறித்த பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவரே காயமடைந்துள்ளார்.

இயக்கச்சி நித்தியவெட்டை பகுதியில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் பணியாளர்கள் மனிதநேய கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related posts: