இயக்கச்சியில் குண்டு வெடிப்பு – ஒருவர் படுகாயம் – வெடிகுண்டு தயாரிப்பு முயற்சி என சந்தேம்!

Saturday, July 4th, 2020

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த இரவு இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தினால் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த தங்கராசா தேவதாஸன் என்ற வயது 43 உடையவரே படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெடிகுண்டு தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளையே குறித்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக தெரியவருகிறது

Related posts: