இம் மாதத்துக்குள் ஔடத விலை கட்டுப்பாட்டுச் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டும்!

Thursday, September 8th, 2016

நாட்டில் இம் மாதத்துக்குள் ஔடத விலை கடடுப்பாட்டுச் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதையடுத்து நடைமுறைக்கு வருமெனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நேற்று தெரிவித்துள்ளார்.

இச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலம் குறித்து செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதனால் அமைச்சருக்கும் செய்தியாளர்களுக்குமிடையே நேற்று கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

“காலம் அல்ல இப்போது முக்கியம். நான் பேராசிரியர் பிபிலவிடம் நேரடியாக கல்வி கற்ற மாணவன் எனக்கும் இதனை விரைவில் அமுல்படுத்த வேண்டும். இருப்பினும் மருந்து விலைகளுக்கான சூத்திரங்களை தயாரிப்பது அத்தனை இலகுவான விடயமல்ல. நாம் இது குறித்து மருந்து விற்பனை நிறுவனங்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். விரைவில் இதற்கான சூத்திரங்களை தயாரிப்போம்.

விலைக் கட்டுப்பாட்டுக் குழுவினை செயற்படுத்துவோம். வெகு விரைவில் மருந்துகளின் விலைகள் நான்கைந்து மடங்குகளால் குறைக்கப்படும் “ என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

950

Related posts: