இம்முறை O/L பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Wednesday, March 14th, 2018

இம்முறை கல்விப் பொதுத்தர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது

தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் இம் மாதம் 31 அம் திகதிக்கு முன்னர் அந்தத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என அதன் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார்

இதனுடன் தொடர்புடைய சுற்றறிக்கை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன .அதன்பபடி 15 வயது பூர்த்தியான மாணவர்களுக்கு இவ்வாறு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளது

இவ்வருடம் ,பாடசாலை மாணவர்களுக்காக சுமார் 3 இலட்சத்து 50ஆயிரம் அடையாள அட்டைகளை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக ஆட்பதிவுத்  திணைக்கள ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: