இம்முறை 8,224 மாணவர்களுக்கு 9 பாடங்களில் ஏ!

Friday, March 31st, 2017

கடந்த டிசம்பரில் நடைபெற்று நேற்று முன்தினம் வெளியாகிய ஜீ.சி.ஈ சாதாரண தரப் பரீட்சையில் 8,224 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் 6,102 மாணவர்களே 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றிருந்தனர். இந்த முறை அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது இதேவேளை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் கணித பாடத்தில் சித்தியடைந்தோர் 7.63 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களம் கூறியுள்ளது. வரலாறு பாடத்தில் 80.75 வீதமானோர் சித்தியடைந்துள்ளனர். வெளியாகியுள்ள பெறுபேறுகளுக்கு அமைய உயர்தர வகுப்புத் தோற்றுவதற்கு 69.94 வீதமானோர் தகதி பெற்றுள்ளனர் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 0.61 வீதம் இந்த வருடம் உயர்தர வகுப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: