இம்மாதம் 31 ஆம் திகதி இலங்கை வருகிறார் பான் கீ மூன்!

Friday, August 26th, 2016

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இம்மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  இக்காலப்பகுதியில் அவர் ஜனாதிபதி, பிரதமர் உட்பட மற்றும் பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: