இம்மாதம் 20 இல் புதிய உள்ளூராட்சி மன்றங்கள் ஆரம்பம்!

இம்மாதம் 20ம் திகதி புதிய உள்ளுராட்சி மன்ற நிறுவனங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகு என்று மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
உள்ளுராட்சி மன்ற தலைமை ஆணையாளர் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களின் முதலாவது கூட்டம் பிரதி உள்ளுராட்சி மன்ற ஆணையாளரின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ளது. புதிய உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளை தெளிவுபடுத்துவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபையின் முதலாவதுகூட்டம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதன் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 119 ஆகும். அங்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையால் கொழும்பு மாநகர சபையில் இதற்கான வசதிகள் இல்லை. இதற்காக புதிதாக கட்டிடம் ஒன்று அமைக்கப்பட இருப்பதாகவும் மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
|
|