இம்மாதம் நடுப்பகுதியில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சை!

Friday, August 3rd, 2018

அடுத்த வருடம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றறிக்கைக்கு அமைவாக நேர்முகப் பரீட்சைக்கான உறுப்பினர் குழுக்களை நியமிப்பதற்கு தற்போது ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பான ஆலோசனைகள் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பப் படிவங்களைப் பட்டியலிடும் நடவடிக்கைகள், பாடசாலைகள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்பிரகாரம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதியளவில் முதற்கட்ட நேர்முகப் பரீட்சை பூர்த்தி அடையும்.

நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் தொடர்பான தற்காலிகப் பெயர் பட்டியல், செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதியளவில் பாடசாலைகளில் காட்சிப்படுத்தப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: