இம்மாதத்தில் 33000 மெற்றிக் டன் எரிவாயுவை கொண்டுவருவதே இலக்கு – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

33 000 மெற்றிக் தொன் எரிவாயுவை இந்த மாதத்துக்குள் நாட்டுக்கு கொண்டு வருவது இலக்காக உள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த இலக்கை அடைவதற்காக எரிவாயு அடங்கிய மேலும் 6 கப்பல்கள் நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளன.
நுகர்வோருக்கு தொடர்ந்து எரிவாயு வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறு எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது.
இதற்கமைய 3,500 முதல் 3,700 மெற்றிக் டன்னுக்கு இடைக்கப்பட்ட 6 எரிவாயு கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 எரிவாயு கப்பல்கள் நாட்டுக்கு வந்துள்ளன.
நேற்றைய தினமும் 3740 மெற்றிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது நாளாந்தம் ஒரு லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாகவும் தொடர்ந்தும் எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|