இன்றைய காலநிலை – வடக்கிலும் பலத்த காற்றுவீசும்!

Saturday, May 4th, 2019

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, தென், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts:

முகக்கவசமின்றி பொதுவெளியில் நடமாடினால் 6 மாத சிறைத்தண்டனை - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹ...
தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்துக்கு அனுமதி வழங்கினார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!
தொடர்ந்தும் நட்டத்தை சந்தித்து வரும் அரச ஊடகங்கள் - ஊடக விவகாரங்களுக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு...