இன்று(01) முதல் கடும் மழையுடன் கூடிய காலநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, August 1st, 2019

நாடு முழுவதும் இன்று(01) முதல் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் 65 கி.மீ வரை அதிகரிக்குமெனவும் குறித்த திணைக்களத்தால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்ப​டி மீன்பிடி, கடற்றொழில்களில் ஈடுபடுவோர் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மஹவெவ – தொடுவாவ பிரதேசத்தில் பலத்த காற்று வீசக்கூடும் அபாயம் காணப்படுவதாகவும், இதனால் கடலலைகள் உயர்வடையும் நிலையில் அவதானத்துடன் இருக்குமாறும் திணைக்களத்தால் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: