இன்று 102 தொடருந்துகள் சேவையில் – குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தின் சேவைகளும் முன்னெடுப்பு!

காவல்துறை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட இன்று காலை முதல் தொடருந்து சேவைகள் இடம்பெறுகின்றன.
இதற்கமைய, இன்றையதினம் 102 தொடருந்து பயண சேவைகள் இடம்பெற்றதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரச மற்றும் தனியார் வங்கிகள் இன்று முற்பகல் 11 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தின் சேவைகள் இன்றையதினம் இடம்பெற்றுள்ளன..
எனினும், குறித்த திணைக்களங்களின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்றதாக அதன் பிரதானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நீரோடையில் இரத்தினக்கல் அகழ்ந்து கொண்டிருந்த ஒருவர் கைது!
முல்லைத்தீவு கடற்றொழிலாளர் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முச்சக்கர வண்டியின் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90 ரூபாவாக...
|
|