இன்று வழமை போன்று எரிபொருள் விநியோகம் – 6 நாட்களுக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்க முடியும் எனவும் துறைசார் தரப்பினர் அறிவிப்பு!

Wednesday, June 8th, 2022

எரிபொருள் விநியோகம் இன்று வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எரிபொருளுக்கான கேள்வி தற்போது அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 2.5 மில்லியன் டொலர் கட்டணத்தை செலுத்தி எரிவாயுவை இன்று தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதனூடாக மேலும் 6 நாட்களுக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: