இன்று வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான முக்கிய கலந்துரையாடல்!

நிரந்தர அரசாங்க வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மேற்கொண்டு வரும் காலவரையற்ற போராட்டம் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை -09 மணி முதல் வடமாகாணத்திலுள்ள வேலையற் ற பட்டதாரிகள் அனைவருக்குமான முக்கிய கலந்துரையாடலொன்றைப் போராட்டக் களத்தில் முன்னெடுப்பதற்கு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் தீர்மானித்துள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் ஒரு வருடப் பயிற்சிக் காலத்திற்குட்பட்டவாறு மாவட்ட அடிப்படையில் பட்டதாரிகளுக்குக் கான அரச நியமனம் வழங்குவது தொடர்பாக அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை , வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளமை யால் அனைத்துப் பட்டதாரிகளையும் உரிய நேரத்த்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
Related posts:
இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கையில்!
யாழ். விமான நிலையம் தொடர்பில் எச்சரிக்கை விடும் தேர்தல் ஆணையகம்!
|
|