இன்று வடபகுதி முழுவதும் மின்சாரத் தடை!

Saturday, July 14th, 2018

வடபகுதிக்கான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் வடக்கு மாகாணம் முழுவதிலும் இன்றும் நாளையும் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

வடபகுதிக்கான பிரதான மின் மார்க்க வழிகளான அனுராதபுரம், வவுனியா ஊடான மார்க்கங்களில் திருத்த வேலை காரணமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மின் வெட்டு வடக்கு மாகாணத்தில் அமுலில் இருக்கும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலேயே மின் வெட்டு குறித்த இரு தினங்களிலும் முற்றாக துண்டிக்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

எனவே சகல மின் பாவனையாளர்களும் மின்வெட்டை கருத்தில் கொண்டு முன் ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், இதனால் மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: