இன்று வடக்கில் உச்சம் கொடுக்கும் சூரியன் !

Monday, April 12th, 2021

வடக்கின் பல பிரதேசங்களுக்கு மேலாக இன்று நண்பகல் 12.11 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வேப்பங்குளம், மடுவீதி, பிரமணாளன், பம்பைமடு, தாண்டிக்குளம் மற்றும் பெரியகரைச்சிவெவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக இவ்வாறு சூரியன் உச்சம்கொடுக்கவுள்ளது.

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதிவரை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம்கொடுக்கவுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அதிக நீராகாரத்தை எடுத்துக்கொள்ளுமாறும் அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts: