இன்று முதல் விசேட பஸ் சேவை முன்னெடுப்பு!

Wednesday, February 7th, 2018

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இன்று(07) முதல் விசேட பஸ் போக்குவரத்து சேவையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

விசேட சேவையின் நிமித்தம் 150 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும், தேர்தல் நடவடிக்கைகளுக்காக , தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட செயலகங்களூடாக சுமார் 1000 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அத்தியட்சகர் ஆர்.ரி.சந்திரசிறி குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது

Related posts: