இன்று முதல் வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்வைக்கப்பட்ட 362 பிரேரணைகள் அமுலாகின்றது!

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்வைக்கப்பட்ட 362 பிரேரணைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமுல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து அமைச்சுக்களின் செயலாளர்களை வரவழைத்து தெளிவூட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரவி கருனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான செயற்றிட்டங்கள் என்பன இன்றுமுதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து செயற்பாடுகளும் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பயனடையும் வகையில், விரைவாக இந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் பணிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் இடம்பெற்றால் வாக்குப்பதிவில் வீழ்ச்சி - பெப்ரல் அமைப்பு!
பாடசாலை மாணவர்களுக்கென ஜனாதிபதி தலைமையில் சிறப்பு திட்டம்!
ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடாத்த முடியாது - வர்த்தமானி வெளியாகியுள்ளது...!
|
|