இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களும் உயர்வு!

Monday, August 1st, 2016

முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் கிலோ மீட்டருக்கு 5 ரூபா வீதம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுய தொழில் ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இரண்டாவது கிலோ மீட்டரில் இருந்து இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் முதலாவது கிலோ மீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என மேலும் பல முச்சக்கர வண்டி தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: