இன்று முதல் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை -வளிமண்டலவியல் திணைக்களம் !

Sunday, October 30th, 2016
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 முதல் 150 மில்லிமீற்றருக்கு இடைப்பட்ட பலத்த மழை வீழ்ச்சி இன்றுமுதல் பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் கரையோரப் பகுதிகளில் காலை வேளைகளில் மழை பெய்யலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுள்ளது.

511280_1280x720

Related posts: