இன்று முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் ஆரம்பம்!

Monday, July 2nd, 2018

நாடளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை தேசிய விபத்து தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விபத்து தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
நாட்டில் அதிகளவு வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றமையினால் மரணங்களின் எண்ணிக்கையும் உபாதையடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதனால் வாகனச் சாரதிகளை அறிவுறுத்தும் முகமாக இவ்வாறான தேசிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக, விபத்து தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: