இன்று முதல் திருமலை – யாழ் புதிய பேருந்து சேவை ஆரம்பம்!

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான, இலங்கை போக்குவரத்து சபையின் புதிய பேருந்து சேவையொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திலிருந்து மாலை 4 மணிக்கு இந்த பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
புல்மோட்டை முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு தினமும் இந்த பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. பயணிகளின் வேண்டுகோளுக்கு அமைய, யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு வவுனியா ஊடாக மற்றொரு சேவையும் நள்ளிரவு 12 மணிக்கு இடம்பெறவுள்ளது.யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கான இறுதி பேருந்து சேவை தினமும் மாலை 7 மணிக்கு மாத்திரமே முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த மேலதிக சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிறைவுபெற்ற படையினரின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் திங்களுடன் நீக்குவதாக இருந்தால் முறையான திட்டம் வகுக்கப்...
திருகோணமலை - மட்டக்களப்பு வீதியின் பட்டிதிடல் பகுதியில் பேருந்து - டிப்பர் மோதி விபத்து: 26 பேர் காய...
|
|