இன்று முதல் அடையாள வேலைநிறுத்தம் –  புகையிரத தொழில்நுட்ப சேவை அறிவிப்பு!

Tuesday, May 29th, 2018

ஊதிய உயர்வு உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து இன்றுமுதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், இன்று மாலை 4 மணி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி மாலை 4 மணி வரை இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு தலைவர் பீ.சம்பத் ராஜித கூறியுள்ளார்.

அத்துடன் இந்த வேலைநிறுத்தத்தில் 12,000 ஊழியர்கள் ஈடுபட உள்ளதுடன். அவர்களுடைய கோரிக்கைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: