இன்று மனித உரிமைப் பேரவையின் 32ஆவது அமர்வு!

Monday, June 13th, 2016

மனித உரிமைப் பேரவையின் 32ஆவது அமர்வு இன்றைய தினம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.

மனித உரிமைப் பேரவையின் ஆணையாளார் சயிட் அல் ஹீசெய்ன் தலைமையில் அமர்வுகள் ஆரம்பாகவுள்ளது. இந்த அமர்வுகள் எதிர்வரும் மாதம் 1ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30ஆம் அமர்வுகளின் போது இலங்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் பரிந்துரைகள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றது அதன் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 29ஆம் திகதி ஆணையாளர் அல் ஹீசெய்ன் வாய்மொழி மூல அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.

இதன் போது மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை விளக்கம் அளிக்கவும் உள்ளது.

இதேவேளை, இந்த அமர்வுகளில் ஜெனீவாவில் கடமையாற்றி வரும் இலங்கைப் பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்பார்கள் எனவும் மேலதிகமாக எவரும் அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள் எனவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபையின் பிரதிநிதிகள் சிவில் அமைப்புக்கள் மற்றும் சில தமிழ்அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமர்வுகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமர்வுகளில் பங்கேற்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: