இன்று நவராத்திரி விரதம் ஆரம்பம்!

Saturday, October 1st, 2016

முப்பெரும் தேவிகளின் அருளை வேண்டி இந்துக்களால் முறைப்படி விரதமிருந்து அனுஷ்ட்டிக்கப்படுகின்ற நவராத்திரி விரதம் இன்று (01)ஆரம்பமாகி ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இவ்வாண்டு (துர்முகி வருடம்) புரட்டாதி மாத வளர்பிறைப் பிரதமை எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி அமைகின்றது, நவமி 10ம் திகதி முன்னிரவில் முடிவடைகிறது.

விரதம் இன்று 01ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும். பத்து நாட்கள் வருகின்ற போது துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதிக்கு கோவிலில் கும்ப பூசை மூன்று தேவியருக்கும் செய்யப்படுகின்றது.

ஆயினும் சரஸ்வதிக்குரிய நாளை மூல நட்சத்திர நாளில் ஆரம்பித்து திருவோண நட்சத்திர நாளில் நிறைவு செய்ய வேண்டும் என்று விரத நிர்ணய விதி இருப்பதால் இவ்வாண்டு சரஸ்வதி பூசை 08.10.2016 சனிக்கிழமை ஆரம்பமாகி 10.10.2016 திங்கட்கிழமை நிறைவுபெறுகின்றது.

எனவு இம்முறை இலக்குமி தேவிக்கு நான்கு நாட்கள் அமைகின்றது. மறுநாள் 11.10.2016 செவ்வாய்க்கிழமை விஜயதசமி – ஏடு தொடக்குதல் மற்றும் கேதாரகௌரி விரதத்தின் தொடக்க நாளாக அமைகின்றது.

48_large_032819716

Related posts: