இன்று நள்ளிரவு வெளியாகிறது க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்!

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நாளை அதிகாலை வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.Doesnets.lk/exam என்ற இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாதாரண தர பரீட்சையில் 6, 56, 641 பரீட்சார்த்திகள் தோற்றினர். நாடு முழுவதிலும் இடம்பெற்றிருந்த 4661 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடாநாட்டில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு
5 வருட சிறை – எச்சரிக்கிறது ஆட்பதிவுத் திணைக்களம்!
ஒரு நாள் சேவை ஊடாக பரீட்சை சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அற...
|
|