இன்று நள்ளிரவு முதல் மருந்துகளின் விலைகள் குறைவடையும்!

Friday, October 21st, 2016

48 வகையான மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பாக வர்த்தமானியில் வெளியிடுவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் கையொப்பமிடப்பட்டுள்ளது.  அதன்படி இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நீரழிவு, இரத்தச் சோகை உள்ளிட்ட சில நோய்களுக்கான மருந்துகள் உட்பட 47 வகையான மருந்துகளுக்கான விலை குறைக்கப்படவுள்ளது.  விலை குறைப்பு காரணமாக ஏதேனும் நிறுவனங்கள் மருந்துகளுக்கு பற்றாக்குறையை ஏற்படுத்த முற்படின் அதற்கு முகம்கொடுக்கவும் தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

rajitha-senaratne_8

Related posts: