இன்று நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணங்கள் 22% இனால் அதிகரிப்பு – குறைந்த கட்டணமும் 40 ரூபாவாக நிர்ணயம்!
Thursday, June 30th, 2022இன்று (30) நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, ஆகக்குறைந்து பேருந்து கட்டணம் 32 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய கட்டணங்கள் 22 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பேருந்து தொழிற்சங்கங்கள் கோரிய, 40 ரூபா ஆகக்குறைந்த கட்டணம் மற்றும் 30 சதவீத பேருந்து கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, போக்குவரத்து அமைச்சிடம் நேற்று (29) சமர்ப்பித்திருந்தது.
எவ்வாறியினும், போக்குவரத்து அமைச்சின் முன்மொழிவுக்கமைய, 22 சதவீதத்தினால் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கவும், குறைந்த கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஊடகவியலாளரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை!
அரச பல்கலைக்கழகமாக மாறுகின்றது ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் – ஜனாதிபதி அதிரடி உத்தரவு!
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு நிகராக SINOPEC மற்றும் IOC நிறுவனங்களும் விலை தி...
|
|