இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை சடுதியாகக் குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த விலை குறைப்பு இன்று (20) முதல் அமுலுக்கு வருகிறது.
அதனடிப்படையில் ஒரு கிலோ சோயா 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 580 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது..
அதேபோன்று ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கு 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 290 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது..
*ஒரு கிலோ நெத்தலி 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1,100 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது..
*ஒரு கிலோ பூண்டு 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, புதிய விலை 620 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது..
இதனிடையே ஒரு கிலோ வெங்காயம் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 195 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. சிவப்பு பருப்பு 6 ரூபாய் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 299 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|