இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள்  நிறைவு!

Wednesday, February 7th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று(07) நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நள்ளிரவின் பின்னர் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டவிரோதமானதாகும் என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

மேலும் தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட எந்தவொரு ஊடகங்களூடாகவும் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது எனமேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: