இன்று நடைபெறுவது அடுத்த தேர்தலின் நாற்காலிப் போட்டிகளே – ஈ.பி.டி.பியின் ஈ.பிடி.பி முக்கியஸ்தர் விந்தன்!

இன்று நடந்துகொண்டிருப்பது அடுத்த தேர்தலுக்கான நாற்காலிப் போட்டிகளே அன்றி தமிழரின் நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய முயற்சிகள் அல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் –
தமிழ்க் கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பியே தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.காலாகாலமாக அரசியல் ஆணைகளையும் வழங்கிவருகின்றார்கள்.
ஆனாலும் நம்பி வாக்களித்த மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் சக தமிழ் தலைமைகள் இதுவரை தவறுவிட்டே வந்திருக்கினறன. இதே நிலைதான் இன்றும் தொடர்கின்றது.
2013 இல் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாணசயின் ஆயுள் அடுத மாதம் முடிவடைகின்றது. ஆனாலும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு ஏற்றவாறு அவர்கள் எதனையும் சாதித்திருக்கவில்லை.
அதே போல 2015 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு அரசியல் பலம் பெற்றவர்களும் எதையும் நிறைவேற்றாமல் அதிகாரம் முடிவுறும் ஆயுள் காலத்தை எட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் அடுத்த தேர்தலிலும் இவர்கள் மக்களைத் தேடிவந்து மறுபடியும் மக்களின் ஆணை பெறுவதற்கான தேர்தல் கோசங்களை மட்டுமே இன்று தயாரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இதை உணர்ந்து தமிழ் மக்கள் தமது தலைமையை மாற்றியமைப்பதற்கூடாக புதியவரலாற்றை படைக்கும் சக்தியாக எழவேண்டிய காலத்தின் கட்டாயம் மீண்டும் உருவாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|