இன்று சுனாமி ஒத்திகை!

Wednesday, September 7th, 2016

நாட்டில் சுனாமி அனர்த்தத்துக்கு உள்ளாகக்கூடிய 14 மாவட்டங்களில், இன்று (07), சுனாமி எச்சரிக்கைக்கான ஒத்திகையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டத்தின் போது, சுனாமி தொடர்பான விழிப்புணர்வு, அனர்த்தத்தின் போது வெளியேறுதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அறிவுறுத்தப்படவுள்ளன.

கொழும்பு, கம்பஹா, புத்தளம், மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே, இந்த சுனாமி எச்சரிக்கை ஒத்திகை நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tsunami copy

Related posts: