இன்று சர்வதேச சிறுநீரக தினம் !

Friday, March 9th, 2018

சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் சர்வதேச சிறுநீரக தினமான இன்று ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று நடைபெற்றது.

இலங்கையில் வட மத்திய மாகாணத்திலேயே தொற்றா நோயான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகக்கூடுதலாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் சுமார் 5000 சிறுநீரக நோயாளர்கள் வருடமொன்றுக்கு புதிதாக அடையாளம் காணப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வருகின்றது.

இதேவேளை சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான காரணம் கண்டறியப்படுவதாக அதன் பணிப்பாளர் ரத்ன சிறிஹெவகே தெரிவித்தார்.

Related posts: