இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்!

Thursday, June 27th, 2019

நாடாளுமன்றம் இன்று (27) முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

இன்றைய அமர்வின்போது அவரசகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தமை தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளது. இதற்கான வாக்கெடுப்பு இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தரம் ஒன்றுக்காக பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபம் தொடர்பிலான அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கவுள்ளதாக, கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பிலான துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது.

குறித்த சுற்றுநிரூபம் தொடர்பிலான தமது பரிந்துரைகளும் அந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளதாக குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts: