இன்று காலை இலங்கையை வந்தடைந்த பைஸர் தடுப்பூசி!

Monday, August 23rd, 2021

இலங்கைக்கு சுமார் 80,000 பைஸர் தடுப்பூசி தொகுதி கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான 668 ரக விமானத்தின் ஊடாக இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.

பெல்ஜியத்திலிருந்து இவை கொண்டு வரப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாளைய தினம் ஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளன.

அத்துடன், எதிர்வரும் 27 ஆம் திகதி மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக தினுஷ திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts: