இன்று உலக தபால் தின நிகழ்வுகள்!

Monday, October 9th, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையில் 143 உலக தபால் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வு, பொலனறுவை புத்தி மண்டபத்தில் இன்றைய தினம்(09) நடைபெறவுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதி ஒருவர் தபால் தினத்தில் பங்கேற்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.தபால் தினத்திற்காக இரண்டு புதிய முத்திரைகள் வெளியிடப்பட உள்ளன.சிறு மற்றும் மத்தியதர முயற்சியான்மையாளர்களின் உற்பத்திகளை விற்பனை செய்யும் நோக்கில் புதிய இணைய தளமொன்றையும் தபால் திணைக்களம் இன்று அறிமுகம் செய்ய உள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்

Related posts:


வளலாயில்  மீள்குடியேற்றப்பட்ட மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு பிரித்தானியா அரசு துரித நடவ...
பெண்கள் மட்டுமே பயணிக்கும் வகையில், புகையிரதங்களில் பெட்டி ஒதுக்க நடவடிககை - அமைச்சர் காமினி லொக்கு ...
சிறந்த ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ்...