இன்று உலக காசநோய் தினம்!

Friday, March 24th, 2017

இன்று உலக காசநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.  ‘ஒன்று சேர்வோம் காசநோயை ஒழிப்போம்’ என்ற தொனிப்பொருளில் இவ்வாண்டுக்குரிய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  தேசிய நிகழ்ச்சி களுத்துறை மாவட்டத்தில் இடம்பெறும். அமைச்சர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.

கடந்த ஆண்டு இலங்கையில் 8 ஆயிரத்து 800ற்கு மேற்பட்ட காசநோயாளர்கள் இனங்காணப்பட்டார்கள். இவர்களில் 648 பேர் மரணத்தைத் தழுவியதாக காசநோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் டொக்டர் காந்தி ஆரியரத்ன தெரிவித்தார்.

Related posts: