இன்று உயிர்த்த ஞாயிறு தினம் – தேவாலயங்களில் விசேட ஆராதனை வழிபாடுகள்!

Sunday, April 17th, 2022

உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

அதேநேரம், கடந்த, ஆண்டு கொவிட் 19 பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆராதனைகள் இடம்பெற்றிருந்தனர்.

இதேவேளை, இன்றையதினம் நாட்டின் பல தேவாலயங்களில் விசேட ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே மட்டக்களப்பு மென்ரசா வீதியிலுள்ள சீயோன் தேவலாயத்தில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இன்று ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்றது.

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியிலுள்ள மென்ரசா வீதியில் புதிதாக சீயொன் தேவாலயம் அமைக்கப்பட்டு அங்கு இன்று உயிர்த ஞாயிறு விசேட ஆராதரனையில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு ஆராதரனையில் ஈடுபட்டனர்;.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்பிரல் 21 ம் திகதி சீயோன் தேவலாயத்தில் உயித்த ஞாயிறு தினத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஸாரான் காசீம் தலைமையிலான தற்கொலை குண்டு தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததுடன் 93 பேர் படுகாயமடைந்ததுடன் தேவலாயம் பாதிப்படைந்து இன்று 3 வருடங்கள் நிறைவடைந்துள்ளதுடன் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சாந்திவேண்டி ஆராதரனையில் ஈடுபட்டனர்

இதேவேளை இந்த உயிர்த்த ஞாயிறு ஆராதரனையிட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: