இன்று இலங்கை வருகிறார் சீன பாதுகாப்பு அமைச்சர்!

Tuesday, April 27th, 2021

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் (Wei Fenghe) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகைதரவுள்ளார்..

இலங்கைவரும் சின வெளியுறவு அமைச்சர் நாட்டில் தங்கியுள்ள நாள்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுக நகர செயற்திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு வர்த்தகம், முதலீடுகள், நிதி உதவி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பிலும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பிலும் அவரது இந்த விஜயத்தின் போது, முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: