இன்று இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார செயலாளர்!

இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
நாட்டிற்கு வருகைதரும் அவர் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நாட்டில் இருந்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதன்போது சில இருதரப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் அவர் ஆரம்பித்துவைப்பார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்திய வெளிவிவகார செயலாளர் திருகோணமலை, யாழ்ப்பாணம், மலையகம் உள்ளிட்ட தமிழ் பிரதேசங்களுக்கும் பயணிக்கவுள்ளார்.
இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றதன் பின்னர், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்பபம் இதுவாகும்.
முன்பதாக ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்ற நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|