இன்று இரவு 8 மணிமுதல் நாளை காலை 05 மணி வரை ஊரடங்கு உத்தரவு – ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிப்பு!
Monday, May 16th, 2022நாட்டில் இன்று இரவு 8 மணிமுதல் நாளை காலை 05 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க ஜனாதிபதியால் இந்த ஊரங்கு உத்தரவு அமல்ப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் கீழ் அன்றி பொது வீதி, புகையிரத பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் எவரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொன்.சிவகுமாரனின் சிலையை நிறுவ எதிர்கொண்ட நெருக்கடிகளை வரலாறு பதிவு செய்துள்ளது - ஈ.பி.டி.பியின் யாழ...
யாழ்ப்பாணத்தில் கடும் வரட்சி: ஊரடங்கு நடைமுறையிலுள்ள போதிலும் செவ்விளநீரின் நுகர்வு அதிபரிப்பு – விய...
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் - இந்திய உயர்ஸ்தானிகருக்கு இடையில் சந்திப்பு!
|
|