இன்று இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினம்!

Thursday, August 15th, 2019

இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று(15) கொண்டாடப்படுகின்றது.

இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

இந்த விழாவில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு மந்திரிகள், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றிய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந், அறிவியல் வளர்ச்சியில் மகாகவி பாரதியாரின் பாடலையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: