இன்று அதிகாலை வெல்லவாய பகுதியில் மற்றுமொரு நில அதிர்வு – குறித்த பகுதியில் இதுவரை 3 நில அதிர்வுகள் பதிவு – அபாய நிலை இல்லை – மேலதிக ஆய்வுகள் முன்னெடுப்பு!
Saturday, February 11th, 2023மொணராகலை மாவட்டத்தின் புத்தல, வெல்லவாய பிரதேசங்களில் மற்றுமொரு சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இன்று (11) அதிகாலை 3.48 மணியளவில் 2.3 ரிச்டர் அளவில் குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக, புவிச் சரிதவியல் அளவை சுரங்க பணியகம் அறிவித்துள்ளது. அபாய நிலை எதுவும் இல்லையென பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நேற்றையதினம் (10) பிற்பகல் 12.11 மணியளவில் இப்பகுதியில் 3.0 மற்றும் 3.5 எனும் பதிவுகளில் இரண்டு நில சிறிய அளவிலான நில அதிர்வுகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதல் அதிர்வு இடம்பெற்ற 10-20 செக்கன்களில் 2ஆவது அதிர்வு பதிவானதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் புவிச் சரிதவியல் அளவை சுரங்க பணியகம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன மேலதிக ஆய்வுகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக மற்றொரு சிறப்பான முறை அறிவிப்பு!
நிதி அமைச்சு பதவியை வகிப்பது எனக்கு இலகுவானது - மக்களுக்காக அப்பதவியிலிருந்து பணி செய்ய முடியும் என...
எரிபொருள் வரிசையை குறைக்க எதிர்வரும் சில தினங்களில் மேலதிகமாக எரிபொருள் - டீசலை விநியோகிக்கும் நடவட...
|
|