இன்றும் 5 மணித்தியாலங்கள் வரை சுழற்சி முறையில் மின் துண்டிப்பு – இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி!

நாட்டில் இன்றையதினமும் 5 மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனை அமுலாக்குவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது.
முன்பதாக சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை அமுலாக்குவதற்கு இலங்கை மின்சாரசபை நேற்று கோரிக்கையினை முன்வைத்திருந்த போதிலும் அதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்தது.
இதற்கமைய, A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டது.
பின்னர் மாலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பை அமுலாக்க பொதுப் பயன்பாடுகள் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நிதித்துறையின் எதிர்கால திட்டங்களை வலுப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை - நிதியமைச்சர் ரவி க...
வரும் திங்களன்று பிரதமர் அவுஸ்திரேலியா பயணம்!
11 இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை - வெளியானது விசேட வர்த்தமானி!
|
|