இன்னும் மூன்று மாதங்களுக்கு தேங்காயின் விலை குறையாது – தெங்கு அபிவிருத்தி அதிகார சபை!

தற்போது சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை குறைவடைவதற்கு இன்னும் மூன்று மாத காலம் எடுக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 60 முதல் 70 மற்றும் 80 ரூபா அளவில் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த போகத்தில் தெங்கு உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாகவே, தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக தெங்கு உற்பத்தி சபையின், தலைவர் கபில யகன்தாவலகே தெரிவித்துள்ளார். வீட்டு நுகர்வுக்காக பயன்படுத்தப்படும் தேங்காயில், நூற்றுக்கு 40 சதவீத தேங்காய் கழிவுப்பொருளாக வீசப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
எதிர்காலத்தில் பல நெருக்கடிகள் ஏற்படலாம் - புகையிரத தொழிற்சங்க ஒன்றிணைந்த சம்மேளனம்!
ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி - புதுக்கதை சொல்லும் மத்திய வங்கி ஆளுநர்!
மாணவனை தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்க விடாமல் தடுக்கும் பாடசாலை நிர்வாகம் – நியாயம் கோரி போராடும்...
|
|