இன்றும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

வடக்கு, மேல், தென், சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
Related posts:
ஓய்வூதியர்களின் செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைய வேண்டும் - யாழ். பிரதேச செயலர்!
அஞ்சல்துறை பணியார்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் - அமைச்சர் பந்துல குணவ...
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது!
|
|