இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று இரவு வேளையில் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மேல், தென் மற்றும் வட மாகாணங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மாணவர்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்ற கோவில்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை நீதி...
நிலப் பதிவுகளை நிறைவு செய்ய ஒரு நாள் சேவை!
அனைத்துக் கட்சிகளினதும் பங்களிப்புடன் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் - எதிர்வரும் 29 ஆ...
|
|