இன்றும் கன மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
150 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் கொள்வனவு!
தேர்தலிற்காக 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
மேலும் ஒருவாரத்திற்கு பாடசாலைகள் மூடப்படும் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
|
|